ஆறு அம்பில் சில ஊர் வம்பு


நாள்:
2026. ஜூலை‌ 19.

இடம்:
Alliance Francaise, சென்னை.

தயாரிப்பு:
தியேட்டர் மெரினா.


மொத்தம் 7 குறுநாடகங்கள். ஆனால் 6 அம்பு என தலைப்பு வைத்தது ஏனென தெரியவில்லை. 

இலக்கை தொடாத அம்புகள்:

1. காஃபி வித் கடவுள்:

வீட்டு வேலைக்கு வரும் பெண் மற்றும் அவ்வீட்டை சார்ந்தவருக்கிடையே நடக்கும் உரையாடல். பலமுறை அடித்து துவைத்த கதையை அளித்துள்ளார் விஜய் கணேஷ். தேறவில்லை.

---------------------

2. அவன் அவள் அது:

ஒரே அலுவலகத்தில் உள்ள இருவருக்குமிடையே 'மேடை நாடகம்' ஏற்படுத்தும் தொடர்பை கூறும் கதை. சிரிக்க வைப்பதாக நினைத்து இக்காவியத்தை  அருண்குமார் எழுதியுள்ளார்.இயக்கம்: கோகுல்.

இந்த இருவர் மட்டும் சிரிக்கலாம்.

----------------------

3. ரயில் சிநேகம்:

அம்புலிமாமா புத்தகம் முதல் திரைப்படங்கள் வரை சொல்லப்பட்ட குட்டிக்கதை. அந்த கதையை... மீண்டும் நமக்கு தந்துள்ளனர் எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதனும், இயக்குனர் ஆர்.கிரிதரனும்.

இந்த கதைக்கு 'ரயில் சிநேகம்' எனும் தலைப்பு எதற்கு?

தபால் கடிதம் தந்தபிறகு இனாம் தொகையை எதிர்பார்த்து போஸ்ட்மேன் தலையை சொறிகிறார். 

அதற்கு 'இது என் பிள்ளை (விஜய்) ஆட்சி. இனாம் எல்லாம் தர முடியாது போ' என பதில் தருகிறார் கடிதம் வாங்குபவர்.

போஸ்ட்மேன் மத்திய அரசு ஊழியர். அதற்கும் தமிழகத்தை ஆளும் விஜய் ஆட்சிக்கும் என்ன சம்மந்தம்?

'நீர்தாய்யா Neighbour' வசனம் மட்டும் நன்று.

மற்றபடி சொல்லிக்கொள்ள‌ எதுவுமில்லை.

------------------------

4. கல்பாத்தி ஓர்மைகள்:

முற்கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் இருவரின் உரையாடலை கொண்ட நாடகம். 

நடித்த கோகுல் மற்றும் கே.ஏ. சீனிவாசன்... இருவரும்தான் மாறி மாறி சிரித்தனர். நமக்கு சிரிப்பு வரவில்லை.

ஜெயராமன் ரகுநாதனின் எழுத்தும், ஆர்.கிரிதரனின் இயக்கமும் சோபிக்கவில்லை.

Combined Verdict:
Disasters



இலக்கை தொட்ட அம்புகள்:

1. சித்தப்பா விஜயம்:

வீட்டிற்கு விருந்தாளியாக வரப்போகும் சித்தப்பாவிற்காக காத்து கிடக்கிறார்கள் முருகனும், மனைவி செல்வியும். 

ஆரம்பம் முதல் இறுதிவரை சரவெடி காமடியை தந்துள்ளது ஜெய் ஸ்ரீராமின் எழுத்து.

ராகவன் மற்றும் கேமியோ கேரக்டரில் வரும் ஜாம்மி. இருவரின் நடிப்பும் நன்று.

செல்வியாக வரும் மிருதுளா... கேரக்டருக்கு ஏற்ப தெலுங்கு மற்றும் தமிழ் உச்சரிப்பை துல்லியமாக பேசி அட்டகாசம் செய்துள்ளார்.

நடிப்பும் அமர்க்களம்.

மேடை நாடகத்திற்கு ஒரு ஆகச்சிறந்த நடிகை கிடைத்துள்ளார். வாழ்த்துகள்.

நல்லதோர் நகைச்சுவை நாடகத்தை இயக்கியுள்ள ஆர்.கிரிதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

---------------------

2. உலக வழக்கம்:

பெங்களூரில் வேலை செய்யும் மகளுக்கு வரன் பார்க்கும் தம்பதியர் குறித்த கதை.

சமகால யதார்த்தத்தை பிரதிபலிக்கும் அருமையான நகைச்சுவை குறுநாடகத்தை எழுதியுள்ளார் ஜெயராமன் ரகுநாதன். 

தம்பதிகளாக வரும் காமராஜ் மற்றும் ஸ்ரீவித்யா.. இருவரின் நடிப்பும் 100% கச்சிதம்.

வட்டார வழக்கு பேசுகிறோம் எனும் பெயரில் சென்னை சார்ந்த பல நாடக நடிகர் மற்றும் நடிகையர் திலகங்கள்... இந்த இருவரின் வசன உச்சரிப்பு மற்றும் நடிப்போடு.. முன்பு குறிப்பிட்ட மிருதுளாவின் நடிப்புகளை மேடைகளில் பார்த்து தங்கள் குறைகளை சரிசெய்து கொள்ளலாம்.

அதுவரை நீங்கள் சாதாரண தமிழில் பேசுவதே எங்களுக்கு நிம்மதி.

ஆர்.கிரிதரனின் இயக்கம் வெகுசிறப்பு. சமகால பிரச்னைகளை நேர்த்தியாக ஆராய்ந்து.. இப்படியான நாடகங்களை தொடர்ந்து தருவார் என நம்பலாம்.

-----------------

3. மறக்குமா நெஞ்சம்:

தங்கள் தோழி அகல்யாவை சந்திக்க அவரது வீட்டிற்கு வருகின்றனர் அம்புஜம் மற்றும் கோமளம் எனும் இரு தோழிகள். மூவருமே வயதில் மூத்தவர்கள்.

இந்த வீட்டில் நடக்கும் அலப்பறைகளை.. நொடிக்கு நொடி காமடி கலந்து ரசிக்க வைத்துள்ளனர் எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன் மற்றும் இயக்குனர் ஆர்.கிரிதரன். 

ஒரு நாடகத்தில்...ஒரே நேரத்தில்.. மூன்று பெண்களும் பட்டையை கிளப்ப காமடி செய்வது அபூர்வம். ஏனெனில் அப்படியான வாய்ப்பை 99% ஆண் இயக்குனர்கள் அல்லது கதை, வசனகர்த்தாக்கள்  தருவதே இல்லை. 

அந்த குறையை போக்கியுள்ளனர் ஜெயராமன் மற்றும் கிரிதரன். 

ஒருவேளை அப்படியொரு வாய்ப்பு அமைந்தாலும்... அதை சரியாக அனைவரும் பயன்படுத்தி நடிப்பதில்லை.

ஆனால் இங்கே ஸ்ரீவித்யா, அனிதா பாலச்சந்தர் மற்றும் தீப்தா... மூவரும் தூள் கிளப்பி இருக்கிறார்கள்.

வயதில் சிறியவராக இருந்தாலும்.. மூத்த பெண்மணி வேடத்தில் சிறப்பாக நடிப்பது சிரமமான காரியம். அதை சாதித்துள்ள தீப்தாவிற்கு அதிகப்படியான பாராட்டுகள்.

மனம் விட்டு சிரிக்க வைக்கும் படைப்பினை தந்துள்ள எழுத்தாளர் ஜெயராமன் மற்றும் கிரிதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

10 நிமிட குறுநாடகங்களை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு இம்மூன்று படைப்புகளும் உதாரணம்.


Combined Verdict:
Good


விமர்சனம்:
சிவகுமார் 

----------------------------

No comments:

Post a Comment