இடம்: Alliance Francaise, சென்னை.
எழுத்து: ஜாம்மி நரசிம்மம்.
இயக்கம்: அனிதா பாலச்சந்தர்.
மும்பையில் இருக்கும் ஒரு இல்லத்தில்.. பின் மாலைப்பொழுதில் தோழிகள் சிலர் கூடி பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஒமிஷா எனும் பெண்ணின் வீட்டில் இக்கூடல்கள் நடக்கின்றன. ஒருநாள்.. இங்கு வந்து சேர்கிறார் ஃபுலன் எனும் பெண். அதன் பிறகு இங்கு நடைபெறும் களேபரங்கள் என்னவென்பதை சொல்கிறது இந்த ஆங்கில நாடகம்.
மொத்த நாடகத்திலும்.. நடிப்பால் அசத்தியது ஃபுலிஷ் ஆக நடித்த தீப்தா மட்டுமே. வெவ்வேறு உணர்வுகளை.. மாறுபட்ட முகபாவங்கள் மற்றும் உடல்மொழிகள் மூலம் வெளிப்படுத்தி.. தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்தார். வெகுசிறப்பு.
அடுத்து அதிக காட்சிகளில் வந்து சென்ற அனிதா பாலச்சந்தரின் நடிப்பு சுமாராக இருந்தது.
அளவான இடைவெளிகளில் அழகாக ஒலித்தது கிரிதரனின் பின்னணி இசை.
ஒருசில இடங்களில் ஜாம்மி எழுதிய வசனங்கள் ஓகே ரகம் என்றாலும்.. மற்றபடி எதுவும் தேறவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடும் அதிசயம் எந்த ஆண்டு நடக்குமோ.. அன்றுதான் ஜாம்மிக்கு நகைச்சுவை எழுத்து கைகூடும் போல.
இரண்டில் எது நடந்தாலும் பல உயிர்கள் தப்பும்.
இந்த நாடகம்.. பெரியவர்கள் பார்க்கும்படியான கதை மற்றும் வசனங்களை கொண்டது. அதாவது 18+.
ஆனால் LKG ஆண்டு விழாவில்.. சிறுபிள்ளைகள் நடத்தும் நாடகங்களை விட.. சிறுபிள்ளைத்தனமாக இயக்கி இருக்கிறார் அனிதா பாலச்சந்தர்.
நாடகத்தில் வரும் பெண்கள் அவ்வப்போது கோரஸாக பேசுவது, போதாக்குறைக்கு பெங்காலி சகோதரர்கள் வந்து தமாசு செய்வது, கடைசியில் வரும் நடனம்..போதுமடா சாமி!!
'ஒரு சிறந்த முழுநீள நகைச்சுவை நாடகத்தை எப்படி எழுதுவது மற்றும் இயக்குவது? அதன்மூலம் ரசிகர்களை எப்படி சிரிக்க வைப்பது?' என்பதை ஜாம்மி மற்றும் அனிதா இருவரும்...நன்கு கற்றறிந்த பிறகு... தங்கள் ஹாஸ்ய சேவையை.. ரசிகர்களுக்கு படைக்குமாறு.. அவர்களின் கால் சுண்டு விரல்களை இழுத்து பிடித்து.. கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம்.
Game Set Mrs Match - Gross Mismatch
Verdict:
Disaster
விமர்சனம்:
சிவகுமார்
-----------------------------
No comments:
Post a Comment