இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்
எழுத்து, இயக்கம்: வேத் அருண்.
தயாரிப்பு: கற்பனை குதிரை
சகோதரிகள் மணிமேகலை மற்றும் குண்டலகேசி இருவரும் ரயிலில் பயணிக்கிறார்கள். செல்வந்தர் வீட்டு பெண்ணான அனன்யாவும் இவர்களுடன் இணைகிறார். இதன்பிறகு ஏற்படும் குழப்பங்களை முழுநீளை நகைச்சுவை நாடகமாக தர முயன்றுள்ளார் இயக்குனர் வேத் அருண்.
சகோதரிகள் மணிமேகலை மற்றும் குண்டலகேசி இருவரும் ரயிலில் பயணிக்கிறார்கள். செல்வந்தர் வீட்டு பெண்ணான அனன்யாவும் இவர்களுடன் இணைகிறார். இதன்பிறகு ஏற்படும் குழப்பங்களை முழுநீளை நகைச்சுவை நாடகமாக தர முயன்றுள்ளார் இயக்குனர் வேத் அருண்.
மொத்த நாடகமும் ரயிலுக்குள் நடப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ரயில் போன்ற அரங்க அமைப்பு இல்லாமல்.. ரயிலில் நடக்கும் சம்பவங்களை பார்ப்பது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு தந்திருப்பது சிறப்பு.
முற்றிலும் இளம் தலைமுறையினர் நடித்துள்ளனர். முதல் சில காட்சிகளில் கொங்கு வட்டார வழக்கில் பேச தடுமாறினார் குண்டலகேசியாக நடித்த ப்ரீத்தி. அதன்பிறகு பேச்சில் தொய்வில்லை.
ஞாபக மறதியாளரான டிக்கெட் செக்கிங் அதிகாரி... ஒன்றரை மாதத்திற்கு முன்பு நடந்த பிக்பாக்கெட் சம்பவத்தை எப்படி நினைவு வைத்திருந்தார் என கேட்க தோன்றுகிறது.
ரயிலில் பயணித்த அனைவரும் வண்டியின் போக்கிற்கு ஏற்ப அசைய.. மீனாட்சியாக வரும் மிருதுளா மட்டும்.. அசையாமல் நடித்தது எப்படி? ஏன்?
அனன்யா எனும் செல்வந்தராக சுபிக்ஷாவின் அப்பாவித்தனமான நடிப்பு சிறப்பு. ப்ரீத்தி, ரினி சித்ரா மற்றும் பரமேஷ் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர்.
முழுநீள நகைச்சுவை நாடகம் எடுப்பது கடினமான சவால்.
எழுத்து மற்றும் இயக்கம் நன்றாக இருந்தாலும்.. நடிகர்கள் சொதப்புவார்கள். Vice versa.
ஆனால் இங்கே..(இளம் தலைமுறை) நாடக ரசிகர்களை கவரும் அம்சங்கள் ஆங்காங்கே இருக்கிறது.
இதனை சிறந்த நகைச்சுவை நாடகம் என்றோ.. அறுவையான நாடகம் என்றோ சொல்ல இயலாது.
பார்டரில் பாஸ்மார்க் வாங்கி தப்புகிறது வேத் அருணின் இந்த படைப்பு.
சாதி, மதம், அரசியல் என... ஒரு சார்பாக.... மேடைகளில் தாலியை அறுக்கும்... தரித்திரம் பிடித்த... குப்பை நாடகங்களுக்கு மத்தியில்... இதுபோன்ற நாடகங்கள் எவ்வளவோ மேல் என சொல்லும் நிலை வந்துள்ளது.
'இளம் தலைமுறை நடிகர்களை வைத்து நல்ல நகைச்சுவை நாடகங்கள் தருவாரா வேத் அருண்?' என்பதற்கு காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.
சிக்கு புக்கு கல்யாணம் - Fresh Wave.
Verdict: