கோடை நாடக விழா 2026: கண்ணம்மா

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் பத்தாவது நாடகம்: அஜய் என்டர்டைனர்ஸ் வழங்கிய 'கண்ணம்மா'. எழுத்து இயக்கம்: மல்லிக் ராஜ்.


தன் தாயை கொன்றவனை கொன்றதற்காக சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்படுகிறாள் கண்ணம்மா. இச்சிறுமியின் தாய் கொல்லப்பட்டதற்கான காரணமென்ன? கண்ணம்மாவின் எதிர்காலம் என்னவானது? என்பதை விவரிக்கிறது கதை.

சிறார் சீர்திருத்தப்பள்ளி பற்றிய கதைகள் என்றாலே.. சிறுவர்களின் குற்றம் பற்றியே எழுதப்படுவது மரபு. ஆனால் ஒரு சிறுமியை இப்படியொரு கதையின் நாயகியாக சிந்தித்ததில் தனித்து நிற்கிறார் மல்லிக் ராஜ்.

ஆனால் அது மட்டுமே போதுமா?

லில்லியின் காதலன் தினேஷாக.. ஆதித்யா நடித்துள்ளார். இயல்பாக ஓரிடத்தில் நின்று நடிக்காமல்.. கவட்டைக்குள் கட்டெறும்பிடம் கடி வாங்கியது போல.. கால்களை ஆட்டிக்கொண்டு இருந்தது நல்ல நகைச்சுவை. 

LED திரையில் ரகரகமான பின்னணிகளை காட்டும் ஆர்வத்தை.. இயக்கத்திலும் காட்டாமல் போனது ஏமாற்றம்.

லில்லி மற்றும் அவளது மகள் கண்ணம்மாவின் வாழ்வினில் ஏற்படும் துயரங்கள்.. நம்மிடம் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

வித்யாசமான களத்தில் துவங்கி.. மிகச்சாதாரணமாக கடந்து.. முடிந்து போகிறது இந்நாடகம்.

கண்ணம்மா - உன் கண்ணில் மட்டும் நீர் வழிந்தால் போதுமாம்மா. எம் நெஞ்சிலும் உதிரம் கொட்ட வேண்டாமா?

---------------------------

விமர்சனம்:
சிவகுமார்.