இடம்: Alliance Francaise, சென்னை.
தயாரிப்பு: தியேட்டர் மெரினா.
எழுத்து: வேத் அருண்.
இயக்கம்: ஆர்.கிரிதரன்.
க்ளோனிங் மூலம் மனித குலத்தை உருவாக்குபவர்.. தனது முக்கிய ப்ராஜெக்ட் வேலையில் மூழ்கி கிடக்கிறார்.
அவரது நண்பர் பாலம் பார்த்திபன் மூலம் மும்பை டான் ஒருவரின் மகன் அறிமுகமாகிறார். இதனால் நடக்கும் பிரச்னைகள் என்னவென்பதை முழுநீளை நகைச்சுவை நாடகமாக்க முயன்றுள்ளனர் வேத் அருண் மற்றும் ஆர். கிரிதரன்.
பகவதியாக நடித்துள்ள சுகன்யா சற்று ஓவர் ஆக்டிங் செய்ய.. மற்ற சிலரும் தங்களால் முடிந்த அளவு தம் கட்டி நடித்துள்ளனர்.
இந்நாடகத்தில் தனது கதாபாத்திரை உணர்ந்து நல்ல நடிப்பை தந்தது பாலம் பார்த்திபனாக வந்த அருண் வேணுகோபால் மட்டுமே.
மற்றவர்களின் கதாபாத்திரங்கள் மற்றும் அதற்கான நடிப்பு சில சமயங்களில் எரிச்சலையும், பல சமயங்களில் அலுப்பையுமே தந்தன.
ஒரு முழுநீள நகைச்சுவை நாடகத்தை எப்படி எடுக்கக்கூடாது என்பதற்கு இந்நாடகம் அருமையான உதாரணம்.
இந்நாடகத்தில் வரும் வசனங்கள் மற்றும் கதாபாத்திர பாணிகளை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வைக்க வேண்டும் என்று சொல்வது தவறு.
இமயமலையில்...கல்வெட்டுகளை செதுக்கி.. அங்கு பத்திரமாக..பாதுகாக்க வேண்டும்.
என்னதான் லாஜிக் இல்லாத காமடி நாடகமாக இருந்தாலும் இப்படியொரு சிறுபிள்ளைத்தனமான நாடக பாணியை மேடைக்கு கொண்டு வந்து.. ரசிகர்களை பரிசோதனை எலிகளாக மாற்றிய வேத் அருண் மற்றும் கிரிதரனை ஒரு மாமாங்கத்திற்கேனும் மன்னிக்க இயலாது.
இது தெரிந்திருந்தால்.. எங்கள் க்ளோனிங்கை இந்நாடகம் பார்க்க அனுப்பிவிட்டு... வீட்டில் ஒட்டடை அடிக்கும் வேலையையாவது பார்த்திருப்போம்.
Clone Banega Crorepati - दर्शक बन गया क्लाउन.
Verdict:
Disaster
விமர்சனம்:
சிவகுமார்
No comments:
Post a Comment