2024 சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படங்களின் பிரிவில் வெளியான படம் Mankhurd. மும்பை புறநகர்ப்பகுதியில் இருக்கும் இடத்தின் பெயர்.
தேர்தல் நேரம் நெருங்குகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளை திடீரென கைது செய்து தனியே ஓரிடத்தில் அடைக்கிறது காவல்துறை. இதற்கு பின்னணியில் இருப்பது யார்? என்ன காரணத்திற்கு கைது செய்தார்கள் என புரியாமல் தவிக்கிறார்கள் இருவரும்.
மும்பை நகரில் பொதுமக்கள் புழங்கும் நெரிசலான இடங்களை யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பின்னணி இசையும் நன்று.
நடிகர்களிடம் இன்னும் வேலை வாங்கி இருக்கலாம். இப்படியான கதைகள் முன்பே வந்திருப்பதால்.. அடுத்து என்ன நடக்கும் எனும் எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைத்து விட்டது.
மற்றபடி இயக்குனர் பிரவீன் கிரியின் நல்ல முயற்சியாக இருந்தது இப்படம்.
'சுதந்திரமாக எனது கருத்துக்களை கூற விரும்புகிறேன். ஆகவே நானே தயாரித்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் நடித்த முன்னணி நடிகர்கள் தொழில்முறை நடிகர்கள் அல்ல. ஆகவே அவர்களுக்கு நடிப்புப்பயிற்சி அளித்தோம். Mankhurd எனும் ரயில் நிலையத்தை சார்ந்த அரசியல் இதில் பேசப்பட்டுள்ளது.
மேலும் பல சர்வதேச பட விழாக்களுக்கு இப்படத்தை அனுப்பி வருகிறோம்; எனக்கூறியுள்ளார் இயக்குனர் பிரவீன் கிரி.

No comments:
Post a Comment